மருதாணி!
- க.யாஸ்மின் சிராஜூதீன்
பச்சைவண்ண மேனிக்காரி
செக்கச்சிவந்த சிவப்பழகி
மழலை கையில் சிவந்து சிரிக்கிற
மங்கை மனதை கொள்ளையடிக்கிற
கருமுடியின் கருமை காக்குற
நரைமுடிக்கு இளமை கூட்டுற
பண்டிகைக்கு எட்டிப்பாக்குற
திருவிழாவுக்கு திரும்பிப்பாக்குற
திருமணத்திற்கு முதலில் நிக்கிற
மணப்பெண்ணை அலங்கரிக்கிற
பார்ப்போர்கண்ணைகவர்ந்திழுக்குற
தோட்டத்தில் முதலிடம் பிடிக்குற
மருத்துவகுணம் கொண்டு புகழும் அடையுற!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)