CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?
சென்னை : தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் எல்லாமே "10" தான். விஜய்யின் இந்த சென்டிமென்ட் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தவெக தலைவர் சென்டிமென்ட்டை அதிகம் நம்பக் கூடியவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. விஜய்யை சினிமா தொடர்பான பல விழாக்கள், நிகழ்ச்சிகளில் அனைவருமே பார்த்திருக்கிறோம். அவை அனைத்திலும் விதவிதமாக, ஸ்டைலாக உடையணிந்து வரக் கூடியவர். கடைசியாக மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட கோட் ஷூட் அணிந்து வந்தார். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவரது கட்சியின் கொடி வெளியீட்டு விழா துவங்கி, முதல் மாநாடு, தேர்தல் பிரச்சாரம் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய் வெள்ளை நிற சட்டை, லைட் சான்டல் கலர் பேண்ட் மட்டுமே அணிந்து வந்தார்.
சமீபத்தில் தேர்தல் வெற்றிக்கு பிறகு கவர்னரை முதன் முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர போகும் போதும் அதே வெள்ளை சட்டை, சான்டல் கலர் பேண்டில் தான் சென்றார். ஆனால் 2வது முறை கவர்னரை சந்திக்க சென்ற போது வெள்ளை சட்டை- ப்ளூ ஜீன்ஸ் அணிந்து சென்றார். அப்போது கவர்னரை அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் திருப்பி அனுப்பி விட்டதால், மீண்டும் தனது வழக்கமான அரசியல் உடைக்கு மாறினார் விஜய். நேற்று ஆதரவு பெரும்பான்மையுடன் கவர்னரை சந்திக்க சென்ற போதும் வெள்ளை சட்டை-சான்டல் பேண்டில் தான் சென்றார்.
விஜய்யின் இந்த உடை சென்டிமென்ட்டை அனைவருமே கவனித்திருப்பார்கள். அதே போல் இன்றைய பதவியேற்பு விழாவிற்காக விஜய் தேர்வு செய்ததில அனைத்துமே 10 ஆக உள்ளது. இது தானாக அமைந்ததா அல்லது விஜய்யின் சென்டிமென்ட் காரணமாக இது முடிவு செய்யப்பட்டதா என தெரியவில்லை. விஜய் விரும்பும் நாளில் பதவியேற்கலாம் என்று தான் கவர்னர் கூறியதாக சொல்லப்படுகிறது. தவெக தரப்பில் தான் இன்றே பதவியேற்பு விழா வைக்க வேண்டும் என சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.
எல்லாமே 10...
இன்று தேதி 10 (மே 10), வருடத்தின் கூட்டு தொகையும் 10 (2+0+2+6=10), மாதத்தை 2ஆல் பெருக்கினாலும் 10. விஜய் முதல்வராக பதவியேற்பு விழாவிற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரமும் 10. விஜய்யுடன் பதவியேற்றுக் கொண்ட கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 10.
இவை அனைத்தையும் விட மிக முக்கியமான ஒன்று பத்து மாதம் நம்மைச் சுமந்து பெற்றெடுக்கும் அம்மாவைக் கொண்டாடும், அன்னையர் தினம். விஜய் அவரது அம்மா ஷோபா மீது மிகுந்த பாசம் கொண்டவர். அந்த சென்ட்மென்ட் காரணமாகவும் இன்று பதவியேற்பு விழாவை வைத்திருக்கலாம். இப்படி எல்லாமே பத்து பத்தாக அமைந்திருப்பதும் முத்து முத்தாகத்தான் இருக்கிறது!
பதவியேற்பிற்கு இந்த நாள் ஏன்?
பதவியேற்பிற்காக மே 10 ம் தேதியை தேர்வு செய்ததும் சென்டிமென்ட் மற்றும் ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் தான் நடந்ததாக சொல்லப்படுகிறது. முதலில் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பு என்பதே மிக அற்புதமான நாளாக கருதப்படுகிறது. காரணம், இது சூரிய பகவானுக்குரிய நாள்.
அரச பதவி, தலைமை பதவி, அரசு தொடர்பான விஷயங்களுக்கு காரணமான கிரகம் சூரியன் தான். அது மட்டுமல்ல இன்று அவிட்டம் நட்சத்திரம் அமைந்துள்ளது. பொதுவாகவே "அவிட்டத்தில் துவங்கினால் தவிட்டு பானையும் பொன்னாகும்" என்ற சொல் வழக்கு உள்ளது. இதில் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், அவிட்டம் நட்சத்திரத்தின் சின்னம் முரசு. இது வெற்றியை பறை சாற்றக் கூடியதாகும். இப்படி ஜோதிட ரீதியாக பல விஷயங்களை கணித்து தான் மே 10ம் தேதியை விஜய்யின் பதவியேற்பிற்காக தேர்வு செய்திருக்கிறார்கள்.