மழலைக் குழந்தை!
Oct 15, 2025,01:52 PM IST
- மலர்விழி ராஜா
ஆயிரம்
கனவுகள்....!
ஒன்றாய்......
இணைந்த..,..!
பொக்கிஷம்...!!
உருவான"
நாள் ....முதலே....!
ஆனந்தம்.....!
அள்ளி.... தரும் ..…!
காவியம்
உனது
ஓவியம்....!.. காண
முன்னூறு....…
நாட்கள் .....!
அழகான
தவம்.....!
வலிகள்
தாங்கி....
பின்
உனது.....!
குரல்....
ஒலியை...,!
கேட்டதும்....!
பிறந்திடுதே
புதிய வழி
அழகான
சோலையில்
ஆனந்த
தென்றல்
உனது
சின்ன சின்ன
முக அசைவும்
புது புது
சித்திரங்கள்
தத்தி தத்தி
நடக்கையிலே
அசைந்து
வரும் அழகிய
தேர் தானோ
தத்தை
மொழி
பேசுகையில்
உலகமே
உன்னடியில்
தாவிவந்து
அணைக்கும்
போது நீயும்
ஒரு
புதுக்கவிதை!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)