அனைத்து பரிமானங்களிலும் ஆண்களே ஆதாரமாய்...!

Su.tha Arivalagan
Nov 19, 2025,03:22 PM IST

- கலைவாணி ராமு


ஆண்கள் இல்லையேல்

அகிலமும் இல்லை......

அண்டத்தை ஆள்பவளுக்கே

சிவன் எனும் ஆணே சக்தி.....

அன்பு காட்டுவதில் தந்தையாய்....

தயவு காட்டுவதில் சகோதரனாய்....

நயமுடன் பழகுவதில் நண்பனாய்....

கண்ணான 

கணவனாய்....

கனியமுத கடலாய் 

அனைத்துமாய் மகனாய்....

வயதாகிய பிறகும் பேரனாய்.....

மகனுக்கு நிகரான உறவாய் மருமகனாய்.......

அனைத்து பரிமானங்களிலும்

ஆண்களே ஆதாரமாய்......




நேர்கொண்ட நடைக்கு எப்படி முதுகெலும்பு முக்கியமோ....

அதுபோலவே

குடும்பம் என்னும் உறவுக்கு ஆண்களே 

முதுகெலும்பு.....

தனக்காக உழைக்காமல் 

தன் குழந்தைகளுக்காக 

தன்னையே  அற்ப்பணிக்கும்

அற்புத படைப்பே ஆண்களே.....

தான் அனுபவிக்காத 

ஆனந்தத்தை 

தன் பிள்ளைகள்

அனுபவிக்க வேண்டுமாய்

மெழுகாய் தன்னை உருக்கிக் கொண்டு வாழும் 

அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்


(புதுச்சேரியைச் சேர்ந்த கலைவாணி ராமு கவிஞர், கட்டுரையாளர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)