ஒத்தையடிப் பாதையில ஒத்துமையாப் போகையில!

Su.tha Arivalagan
Nov 21, 2026,03:53 PM IST

- மலைமலர் கி.மேனகா 


என் கரம் பற்றி முன்னாடி நீ நடக்க..

பின்னலிட்ட கால்கள் இரண்டும் 

பின்னாடி  அடி வைக்க...


கண்கள் நான்கும் 

காதல் மொழி பேச...


முத்த மழையால்

உதடுகள் வியர்க்க...


பின்னிக்கொண்ட கைகளில் 

காற்றும் நுழைய இடமில்லை...




கண்ணுக்குள்ள நீயிருக்க

கன தூரம் கண்ட காட்சி எல்லாம் நினைவு இல்லை....


கொலு கொம்பனே 

உன் பரந்த முதுகில் நான் படர....


வழியோர

காய்ந்த மரங்களும் உயிர்பெற்றதே!


(கி.மேனகா B.A, B.Ed, M.A. கணவர் மோகன்தாஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஏற்காடு மலை நகரில் வசித்து வருகிறார். தமிழ் ஆசிரியர். கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உடையவர்)