தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026-27.. தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

Su.tha Arivalagan
Feb 17, 2026,09:51 AM IST

சென்னை:  தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.


தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9:30 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.


இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவிலான அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்பில்லை. அதேசமயம், முக்கிய அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.




தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளது


திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.


ரூ. 10 கோடியில் அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும்


ஜன 25ம் தேதி தமிழ் மொழி தியாகிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது


திசைதோறும் திராவிடம் திட்டத்தில் 74 நூல்கள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது


இலங்கைத் தமிழரக்ளுக்கு ரூ. 456 கோடியில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்.


மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.41 லட்சம் கோடிக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.


ரூ. 285 கோடியில் நான்கு இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படவுள்ளன


தமிழ்நாட்டில் 19 இடங்களில் தோழிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.


முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டத்தின் கீழ் 160 நூல்கள் மொழி பெயர்ப்பு


பெரியாரின் சிந்தனைகள் 21 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது


அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் 27 தமிழில் மொழி பெயர்ப்பு


காலை உணவுத் திட்டத்தின் மூலமாக மாணவர்கள் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது


அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்கள் பயன் அடைகின்றனர்.


25 அன்புச் சோலைகள் - மூத்த குடிமக்கள் பராமரிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது


விடியல் பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை 881 கோடி பயணங்கள்.


விடியல் பயணத் திட்ட பயனாளிகளுக்கு மாதம்தோறும் சராசரியாக ரூ.888 சேமிப்பு


ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது


தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27,40,703 பயனாளிகள் சேர்ப்பு


6.75 லட்சம் மாணவர்களுக்கு இதுவரை இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது


மொத்தம் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திட்டம்


தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களில் 41 சதவீதம் பேர் பெண்கள்


அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலமாக, பெற்றோரை இழந்த / ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவி


அன்புக் கரங்கள் திட்டம் மூலமாக 10,637 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்


தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்புப் பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது


சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ. 17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1000 உதவித் தொகை


தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் 5,40,511 மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர்


புதுமைப் பெண் திட்டம் மூலமாக 6,95,296 கல்லூரி மாணவர்கள் பலன்


புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.