SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!
சென்னை: திருப்புவனம் அஜீத் குமாரின் தாயார் மாலதியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸாரி கேட்டு தொலைபேசியில் பேசியதை விமர்சித்து வரும் எதிர்க்கட்சியினருக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஒரு டிவீட் போட்டுள்ளார்.
அந்த டிவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
SORRY’மா.. இந்த வார்த்தைகளை மொபைல் ஸ்பீக்கரில் கேட்டதும் நெகிழ்ந்தோர் பலர், கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் சொரிந்தோர் பலர் !
என்னைப்போல கூடவே இருந்து பழகுகின்ற பெரும் வாய்ப்பைப் பெற்றவர்களுக்கு தெரியும், அந்த வார்த்தைகளின் ஆழம், அதில் நெகிழ்ந்தோடும் ஈரம்.
அவை சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. அதை நாங்கள் அறிவோம்.
அடடே... நல்ல சான்ஸ் எதிர்க்கட்சி மிஸ் பண்ணிடுச்சி என அரசியல் ஓநாய்கள் ஓலமிட்டன. அச்சச்சோ ஆட்சிக்கு அவப்பேராகுமே என சிலர் அவதிப்பட்டனர்.
அரசைச் சார்ந்தவர்களால் தவறு நிகழ்ந்துவிட்டது, யாரோ செய்த தவறுதானே, எனக்கென்ன என்றிருக்கவில்லை. தட்டிக்கழிக்கவில்லை, மூடி மறைக்கவில்லை.
முறையான விசாரணைகள், அதுவும் துரிதமாக. தயங்கவில்லை தாமே முன்னின்றார், பொறுப்பேற்றார், நினைத்திருந்தால் என்னவெல்லாமோ செய்திருக்கலாம் !
வேறு யாராவது இந்த நாற்காலியில் இருந்திருந்தால் கையில் ஆட்சி, போலிஸ், இன்டெலிஜென்ஸ், அரசு இயந்திரம், ஐ.டி.விங், நேரேட்டிவ், செட்டிங் என என்னவெல்லாமோ செய்திருப்பார்கள் !
ஆனால் இவர் இதுவரை யாரும் செய்யத் துணிந்திடாத ஒன்றைச் செய்து, "மாண்புமிகு"வென உயர்ந்து நிற்கிறார் திராவிட நாயகர், ஒப்பற்ற நமது முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின்.
தனியொருவராக இந்த பிரச்சனையை மிகச் சரியாக ஒரு முதிர்ந்த அரசியல் ஆளுமையாக, தமிழ்நாடு அவர் மீது வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும் பாசதிற்கும் பாத்திரமாக, ஒரு 'அப்பா' வாக... ஒரே ஃபோன் கால் !
ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மனசாட்சி உள்ள அனைவரும் நமது முதலமைச்சர் எப்படி பட்ட மகத்தான மனிதர் / தலைவர் என்பதை முழுமையாக புரிந்து கொண்டனர்.
He did not pass the responsibility. He Owned up to the mistakes of his subordinates as a Responsible #LEADER and more importantly as a Human Bieng with a heart of gold.
"யாரோ செய்த தவறுக்கு இவர் எதற்கு மனிப்பு கேட்கவேண்டும்" என்று பலர் என்னிடம் கேட்டனர்...யோசித்து பார்த்தேன்... பின்பு தெரிந்தது... ஏன்னென்றால் இவர் தலைமைப் பண்புகள் நிரம்பியுள்ள, மனசாட்சியுள்ள, மக்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ள ஒரே முதலமைச்சர். பதவியை பொறுப்பு என்று அழைக்கும் ஒரே முதலமைச்சர்.
ஆட்சி வரும் போகும் ஆனால் எந்நேரத்திலும் நியாயத்தின் பக்கம், ஜனநாயகத்தின் பாதுகாவலராக அடிப்படை உரிமைகளின் பக்கம், மனிதாபிமானத்தின் பக்கம், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நின்றார் தமிழ்நாட்டின் முதலமைச்சர், எங்கள் பெருமைமிக்க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
'மாண்புமிகு' சொல்லல்ல செயல் என்று கூறியுள்ளார் டி.ஆர்.பி. ராஜா.