அமைச்சர் ரகுபதியின் சட்டத்துறை.. துரைமுருகனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கீடு.. திடீர் இலாகா மாற்றம்

Manjula Devi
May 08, 2025,02:55 PM IST
சென்னை: அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

சமீபத்தில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் அமைச்சரவையில் ஒரு இலாகா மாற்றம் நடந்துள்ளது.



நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கணிமங்கள் மற்றும் சுரங்கத்துறை ஆகியவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. ரகுபதி வசம் இருந்த சட்டத்துறையை, துரைமுருகனுக்கு மாற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் அளித்த பரிந்துரையின்பேரில் இந்த இலாகா மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக இனி அழைக்கப்படுவார்.