சிகைக் கொற்றன் வரகண்ட' என்று.. எகிப்தியர்களையும்.. ஈர்த்தமொழி!

Su.tha Arivalagan
Feb 21, 2026,12:21 PM IST

- எம்.கே. திருப்பதி


மொழி!  -- அது 

வெறும் சொல்லல்ல 

ஒவ்வொருவரின் விழி!

வார்த்தைகளை செதுக்கும் உளி!


தனி ஒருவரின்

தாய்மொழி 

தலைசாய்த்து சுகங்கொள்ளும்

தாய்மடி 




எங்கும் எதிலும் 

என் தாய்மொழி

பொங்கும் புகழ் 

தங்கும் தாய்மொழி 


வங்கம் தாண்டியும் 

வாழும் மொழி 

அட்லாண்டிக்க அடுத்தும் 

ஆளும் மொழி 


'சிகைக் கொற்றன் 

வரகண்ட ' என்று

எகிப்திய மம்மிகளில்

ஈராயிரம் ஆண்டுகள்முன்  

ஈர்த்தமொழி 


குறளின் குறிப்பில்

மிரளும் உலகம் 

இன்தமிழ் இலக்கியச்செறிவு 

இமிழ்கடல் அமுதாய் திரளும் 


இமயத்தளவு 

இலக்கண வகுத்து 

இன்னிக்கும் சிறத்து


திசைச்சொற்கள் திரண்டாலும் 

வடசொற்கள் வந்தாலும் 

வாடா வதங்கா வரவேற்கும் 

வற்றிவிடா வண்தமிழின் 

வார்த்தை வரத்து


அறிவியல் புதுமைகளுக்கு 

அன்னைத்தமிழ் 

அழகுப்பெயர் சூட்டும் 

அறிவுத்தமிழ் என்றும்

அணையா தமிழ் என்று  

அகிலத்திற்கு காட்டும் 


தமிழின் வாழ்வு

தமிழன் வாழ்வு 

தமிழன் வாழ்வு

தமிழின் வாழ்வு!


தாய்த்தமிழ் போற்றுவோம் 

தாய்மொழி போற்றுவோம்

தமிழுணர்வை 

தலைக்குள் ஊற்றுவோம் 

தமிழ்கொடியை 

தரணியெங்கும் ஏற்றுவோம்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)