Tamil Poem by Thirupathi: வா முதல்வா வாழ்த்துகிறோம்!
- எம்.கே.திருப்பதி
விஜய் என்றால்
வெற்றி!
வெற்றிதான் உன்
பெற்றி!
சினிமாப் புகழ் - உன்னை
சிஎம் சீட்டில்
சிகரமாக இருத்துகிறது!
இன்று முதல் நீ
எட்டு கோடி இதயங்களின்
ரத்த நாளம்!
தலைமைச் செயலகம்
அழகிய தமிழ்மகனை
அலங்கரிக்க
ஆவல் கொள்கிறது!
அரசியல் பேதமின்றி
அறுவடை செய்திருக்கிறாய்
ஈரம்பதுக்கு மேற்பட்ட
இதயங்களை!
உன் வெற்றியை
தன் வெற்றியாய்
தலையில் தாங்குகிறது
தமிழகம்!
சிலிர்த்து நிற்கிறது
சினி உலகம்!
சினிமாவில் நீ செய்த
சீர்த்திருத்தம்
நிஜமாக நடந்தால்
நிம்மதி நிலைக்கும்!
இன்று உன் தோள் சுமப்பது
வெற்றியல்ல..
ஒவ்வொரு தமிழனின்
நம்பிக்கை!
சமூக மேடு பள்ளங்களை
சமப்படுத்து நீ!
பொருளாதார சிக்கலுக்கு
அருளாதாரம் செய்!
மதுக் கடையை
மண் தோண்டி புதைத்திடு!
போதையை
புதைகுழியில் அமிழ்த்திடு!
கல்வியை
கச்சா பொருளாய் எண்ணாதே!
கடமை என்று
காரியத்தில் இறங்கு!
மகளிர் மகிமை
மண்ணறியச் செய்!
மாணவர் மனங்களை
மகிழ்ச்சியில் வை!
பணநாயகத்தை
ஜனநாயகம் வென்றதா
இல்லை
மனநாயகம் வென்றதா
என்பதெல்லாம் இனி
எடுபடா பேச்சு!
அதிர்ந்த தேர்தல்களம்
அறிவிக்கிறது
உனக்கான பாதையை!
இதுதான்
இப்போதைய காட்சி!
என் தராசுத் தட்டு
சமமா இல்லை!
சற்றே தாழ்கிறது...
நீ அதை
நிறை செய்வாய்!
நம்புகிறோம் உம்மை!
அமுதூட்டும் அம்மை!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)