அச்சச்சோ .. நான் கூட டெங்கு கொசுவோன்னு நினைச்சுப் பயந்துட்டேங்க!

Su.tha Arivalagan
Apr 19, 2025,04:52 PM IST
ஒரு வழியாக இந்த வாரமும் முடியப் போகுது.. நாட்கள்தான் ஓடுது.. நம்ம பிரச்சினை அப்படியே இருக்கேன்னு உங்களுக்கு கவலையா இருக்கும்தான்.. இருந்தாலும் கவலைப்படுவதால் மட்டும் பிரச்சினை பிச்சிக்கிட்டு ஓடவாப் போகுது.. அது போறப்பத்தான் போகும்.. அது போறப்ப போகட்டும்.. நீங்க நாலு ஜோக்ஸ் படிச்சு நல்லா சிரிச்சுட்டு இந்த வாரத்தை சிறப்பா முடிக்கப் பாருங்க.. வாங்க சிரிக்கலாம்.


அச்சச்சோ.. டெங்கு கொசுன்னு நினைச்சுட்டேன்

கால்ல என்னமோ கடிச்ச மாதிரி இருந்துச்சு..

அப்புறம்..? 

என்னானு பாத்தா நல்ல பாம்பு...!

அச்சச்சோ

நல்லவேளை, டெங்கு கொசுன்னு நினைச்சு நானும் முதல்ல பயந்துட்டேன்...!






அட முட்டைப் பயலே

ஆசிரியர் - கோழி ஏன் முட்டை போடுதுன்னு தெரியுமா

மாணவன் - அதுக்கு 1, 2, 3 போடத் தெரியாது சார்.. அதான் முட்டையா போடுது!

--

டாக்டரே இப்படிச் சொன்னா எப்படிப்பா

டாக்டர் - வாங்க என்ன பிரச்சினை உங்களுக்கு

நோயாளி - சரியா சாப்பிட முடியலை டாக்டர் .. ஒரு இட்லியைக் கூட முழுசா முழுங்க முடியலை

டாக்டர் - இட்லியை முழுசா முழுங்க முடியாது.. பிச்சுப் பிச்சுத்தான் விழுங்கணும்.. இதெல்லாம் ஒரு பிரச்சினையா!

நோயாளி - ஓ.. இது மன நல மருத்துவமனையா.. சாரி டாக்டர்.. நான் வேற ஆஸ்பத்திரிக்கு போறேன்!





சுத்தமா இல்லையே


ராஜா - ரோஜா ஒரு 100 ரூபாய் இருந்தால் கொடேன்

ரோஜா - ஸாரிடா.. சுத்தமா இல்லை

ராஜா - பரவாயில்லை.. நான் தொடச்சிக்கறேன்!

--

அடேய் மகனே

மகன் - மாடு போலவே இருக்கும்.. ஆனால் சிறுசா இருக்கும்.. அது என்ன சொல்லுங்க

அப்பா - தெரியலையே

மகன் - அதான்ப்பா.. கன்றுக்குட்டி!