அம்மா!
Jan 19, 2026,01:29 PM IST
- கபிசப்ரி தென்றல், தென்காசி
அவள் ஓர் அழகு ..
எளிமையின் அழகு
உயிரின் அழகு
இப்பூவுலகம் வேண்டாம் உனக்கு....
கருவிலே சிதைக்க
நினைத்தாயே ......
இப்பூலகிற்கு அவதரித்தானே
இறைவன்
உன் உருவிலே ....
நீ நினைத்தது கருவறையில் தானே
உன் மனவறையில்லையே என்று...........
பாராட்டி சீராட்டி என்னை
வளர்த்தாளே உனக்கு
உயிர் தந்தவள்
அணுஅணுவா நினைக்கிறேனே
உனது பொக்கிஷமான
பொறுமையை.......
எங்கே தொலைத்தேனே
தெரியவில்லை ....
உன் பேரன்பை ....
பேரன்பை வெளிக்காட்டாமலே
குருதியோடு ஊட்டி
வளர்த்தாயே
சிந்திக்கிறேன்
நீ ஊட்டிய குருதியில்
அற்ப அளவாது ஊட்டினேனா......
நம்பிக்கை வாழ்வின்
உயிர் நாடியே
உனது வாழ்க்கை நெறியே ....
எனக்கு உயிர் பிச்சை
இட்டவளே