Sunday Surprise: இயற்கை அன்னையும் மனிதனும்!

Su.tha Arivalagan
Apr 26, 2026,10:54 AM IST

- ஸ்ரீ


மனிதனை சில காலம் இந்த பூமிக்கு வந்து அனைத்து சுகங்களையும் அனுபவித்து கொள்! என்று கடவுள் இங்கு அனுப்பி வைத்தார்.


முதல் கட்ட தலைமுறை: 


இயற்கையைப் பார்த்து அவர்கள் அதனுடன் எப்படி வாழ்வது என்று பழகி வாழ ஆரம்பித்தனர். 


இலைகளை ஆடையாக உடுத்தி, பசிக்கு இயற்கையாக விளையும் பொருட்களை உண்டு, இயற்கையோடு இணைந்து இயற்கையாகவே வாழ்ந்தனர். அப்போது இயற்கை அன்னை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்.


இரண்டாம் கட்ட தலைமுறை: 


இந்த வகை மனிதர்கள் சற்று யோசிக்கும் திறன் பெற்றவர்கள். அதன் மூலம் நெருப்பைக் கண்டுபிடித்தனர். சமைத்துச் சாப்பிடும் வழக்கத்தை வைத்துக் கொண்டனர். 


மூன்றாம் கட்ட தலைமுறை: 


பின்னர் ஆசையும் கொஞ்சம் சேர்ந்து கொண்டது. இவர்களும் பல பொருட்கள் கண்டுபிடித்தனர். மேலும் இவர்களுக்கு உள்ள ஆசையினால் மக்களையும், மண்ணையும் அடிமைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். இப்போது பூமித்தாய் கொஞ்சம் வருத்தம் அடைந்தார்.  பொதுநலம் எண்ணாமல் தன்னலமாக யோசிக்கும் மனிதர்களைப் பார்த்தார்.


நான்காம் தலைமுறை: 


இவர்கள் சுயநலத்தின் உச்சம் தொட்டவர்கள். இவர்களின் கண்டுபிடிப்புகள் மிகவும் முன்னேற்றம் கண்டுவிட்டன. மின்சாரக் கண்டுபிடிப்பு மற்றும் வாகனங்கள் கண்டுபிடிப்பு என அதன்படி நம் இயற்கை அன்னைக்கு கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டது.




ஐந்தாம் தலைமுறை: 


இவர்கள் நான்காம் தலைமுறையை விட சுயநலத்தின் சற்று மேம்பட்ட விருப்பங்களையும் கொண்டவர்கள். இவர்கள் இயற்கைத் தாயைச் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தனர். இதன் பயனாக போர் ஏற்பட காரணமாக அமைந்தது. மனிதர்களை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தனர். போர்க்குணம் கொண்ட மனிதர்களாக மாற ஆரம்பித்தனர்.


ஆறாம் தலைமுறை:


இவர்கள் போர்க்குணம் மற்றும் தொழில்நுட்பங்களில் வளர்ச்சியுற்றனர். ஏழாம் தலைமுறை (7th Generation Computer) செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர். அதன் பயனாய் இந்த பூமிக்கு அணுகுண்டு மற்றும் பல அணுக்கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்மூலமும் மனிதர்கள் அவர்களை அவர்களே தாக்கிக் கொண்டனர்.


ஏழாம் தலைமுறை: 


தொழில்நுட்பம் வளர வளர மனிதனிடம் மிருகத்தனமும் வளர ஆரம்பித்துவிட்டது. அதனால் என் பூமித் தாய்க்கு அதிக சேதாரம் ஏற்பட்டது. (ஜப்பானில் நடந்தது - ஹிரோஷிமா, நாகசாகி) எந்த அளவுக்கு பாதிப்பு என்றால் அந்த இடத்தில் புல்கூட முளைக்காத மலட்டுத்தன்மை அடைந்தது.


எட்டாம் தலைமுறை:


எட்டு எட்டா மனித வாழ்வைப் பார்ப்போம்!  


மனிதன் எட்டு வைக்க ஆரம்பித்த நாளில் இருந்து, அவன் இந்த பூமியை எட்டு எட்டா கூறுபோட்டு, விற்க ஆரம்பித்துவிட்டான். தொழில்நுட்ப வளர்ச்சியில் எட்டாத நிலையை அடைந்துவிட்டான். அதே நேரத்தில் பூமித்தாய்க்கு மிகவும் ஒட்டாத நிலையைக் கொடுத்துவிட்டான். மனிதன் பூமிக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டான்.


தன்னியல்பான இயற்கையில் பூமி மிகவும் பொறுமைசாலி. மனிதனிடம் அதிகம் பழக்கம் வைத்து கொண்டதால், அதனிடம் உள்ள நல்ல குணங்கள் சற்று குறைய ஆரம்பித்தது?! 


பொங்கி எழுந்தாள் சூறாவளியாக... சுனாமியாக... 

வெடித்துச் சிதறினால் ரௌத்திரமான எரிமலையாக...

கொட்டித் தீர்த்தாள் வரலாறு காணாத மழையாக... 


மேலும் நிலநடுக்கம் மற்றும் பூமி பிளவு போன்ற எண்ணற்ற தண்டனைகளை அவளும் திருப்பித் தர ஆரம்பித்துவிட்டாள். 


தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதனும் முன்னேறி பூமியை அதிக அளவில் சேதப்படுத்தியது மட்டும் அல்லாமல் அடுத்த கிரகத்தில்  காலடி எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டான்.


இதன் விளைவுகளும் முடிவுகளும் என்னவாக ஆகுமோ??!! 


(கட்டுரையாளர் : திருமதி. ஸ்ரீ, நீடாமங்கலம், திருவாரூர். இனிய இல்லத்தரசி. கைவினைக் கலைகளில் தேர்ந்தவர். இளங்கலை வணிகவியல் பட்டதாரி. எழுத்துக்கலைக்குப் புதியவர்)