பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
சென்னை: புதிய கட்சி கூட்டணியில் வர வாய்ப்புள்ளது. காங்கிரஸ் இயக்கத்துடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். எந்த மோதல் போக்கும் இல்லை. எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ஆளும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் உருவாகியுள்ள கருத்து மோதல்கள் அரசியல் வட்டாரத்தை சூடேற்றியுள்ளது. வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தரப்பில் முன்வைத்திருப்பதும், அதற்கான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை தாமதமாகி வருவதுமாக கருத்துக்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், நெல்லையில் இன்று திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அது யார் என்பதை முதல்வர் தெரிவிப்பார். காங்கிரஸ் இயக்கத்துடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். எந்த மோதல் போக்கும் இல்லை. எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. திமுக மீது நம்பிக்கை வைத்து மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.