அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
மும்பை: ஒரு மாதத்திற்கு அம்பானியின் ஆண்டிலியா இல்லத்தின் மின்சார கட்டணம் 70 லட்சம் முதல் 80 லட்சம் என்ற தகவல் பரவி வைரலாகி வருகிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். இந்தியாவிலேயே அதிக சந்தை மூலதனம் கொண்ட நிறுவனம் ஆகவும் ரிலையன்ஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதன் தலைவராக செயல்படக்கூடிய முகேஷ் அம்பானியின் மும்பை இல்லம் எப்போதுமே செய்திகளில் இடம் பிடிப்பது வழக்கம்.
அந்த வகையில், உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றான முகேஷ் அம்பானியின் 'ஆண்டிலியா' இல்லத்தின் மின்சாரக் கட்டணம் குறித்த தகவல்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 27 மாடிகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட மாளிகையின் மாத மின்சாரக் கட்டணம் ஒரு சராசரி மனிதனின் வாழ்நாள் சேமிப்பை விட அதிகமாக உள்ளது.
ஆண்டிலியா இல்லத்தின் சராசரி மாத மின்சாரக் கட்டணம் ரூ. 70 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மாதத்திற்கு சுமார் 6.37 லட்சம் யூனிட்கள் மின்சாரம் இங்கு பயன்படுத்தப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது சுமார் 7,000 சாதாரண வீடுகளின் மின் நுகர்வுக்குச் சமமாகும். மும்பையின் மின் விநியோக நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி மூலமே இந்த மின்சாரம் வழங்கப்படுகிறது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்த கட்டணத்தை எந்தவித நிலுவையுமின்றி சரியாகச் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.