Jokes: அண்டாவை மட்டும் வச்சியே.. கூடவே ஒரு குண்டாவையும் வச்சுருக்கலாம்ல
- கவிஞர் க. முருகேஸ்வரி
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆனால், இன்றைய அவசர உலகில் நாம் சிரிப்பதையே மறந்துவிட்டு, 'சைலண்ட் மோடில்' ஓடிக்கொண்டிருக்கிறோம். மொபைலில் வரும் நோட்டிபிகேஷன்களை விட, முகத்தில் வரும் ஒரு புன்னகைக்குத்தான் பவர் அதிகம்!
வாழ்க்கை என்பது ஒரு சீரியஸான கிரிக்கெட் மேட்ச் என்றால், அதில் இடையில் வரும் 'ஸ்ட்ரேடஜிக் டைம்-அவுட்' தான் இந்த ஜோக்ஸ், மீம்ஸ் எல்லாமே.. கவலைகளைக் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, மனதை லேசாக்க ஒரு சின்ன சிரிப்பு போதும். மொக்கை ஜோக்கோ, மொக்கையில்லாத ஜோக்கோ, இல்லை கடி ஜோக்கோ... எதுவாக இருந்தாலும் அடுத்தவரை சிரிக்க வைப்பதும், நாம் சிரிப்பதும் ஒரு கலைதாங்க.
புதன்கிழமையை புன்னகையோடு ஆரம்பிப்போமே.. வாங்க, கொஞ்சம் 'காமெடி கியர்' மாற்றி ஜாலியாகச் சிரிச்சுட்டே இந்த நாளை ஜாலியாக கடக்கலாம்.
சுமா: மழை பெய்யும் போது... வெளியில போகாத உமா
உமா: ஏன் சுமா?
ரமா: சந்தன சிலை போல இருக்குற நீ மழையில கரைஞ்சிடக் கூடாதேனு அக்கறைதான்!
--
உமா: நாளைக்கு காலையில டிபன் எதுவும் செய்ய வேண்டாம் சுமா
சுமா: ஏன் உமா?
உமா: உனக்குத் தெரியாதா? நாளைக்கு "அடை" மழை பெய்யுமாம்!
--
அண்டா திருடன்: ஏன்டா வீட்டுக்கு வெளில அண்டாவை மட்டும் வச்சிருந்தியே.. கூடவே, குண்டாவையும் வச்சிருக்கிறாலாம்ல...
வீட்டு உரிமையாளர்: எதுக்குடா???
அண்டா திருடன்: அண்டாவை வச்சு சரக்கு மட்டும் தான் வாங்க முடிஞ்சது...சைடிஷ்க்கு பத்தல!
--
பூமா: போகும் போது நல்லா தான் போன... இப்போ ஏன் மண்ட வீங்கியிருக்கு?
ராமா: வெளியில மழை கொட்டோ கொட்டுனு கொட்டிடுச்சு!
--
உமா: வெளிய போக முடியல,...
தேவி: ஏன்?????
உமா: மழை கொட்டுது
தேவி: மழைக்கு தான் கொடுக்கு இல்லையே.. அப்புறம் எப்படி கொட்டும்?!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).