கவர்ந்திழுக்கும் காந்தக்குரல்.. இசையரசி!

Su.tha Arivalagan
Jul 13, 2026,12:51 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


கவர்ந்திழுக்கும்

காந்தக்குரல்


மனம் மயக்கும்

மந்திரக் குரல்


உயிர்‌ உருக்கும்

உன்னதக் குரல்


குயிலைப் போல்

இனிமைக் குரல் 




சிரித்தே மயக்கும் 

மாயக்குரல்


சிணுங்கியே

கிறக்கும் 

செல்லக் குரல்


கேட்டாலே கிறுகிறுக்க வைக்கும் குரல்


மனதை வருடும்

மழலைக் குரல்


காதல் பொழியும்

காவியக் குரல்


கிளுகிளுப்பூட்டும்

காமக்குரல்


இத்தனைக்கும்

சொந்தக்குரல்


எஸ்‌ ஜானகியின் 

ஞானக்குரல்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).