பெண்களை மதித்த.. போற்றிய.. கொண்டாடிய.. முண்டாசுக் கவிஞனுக்கு நன்றி சொல்வோம்!
- கவிஞர் க. முருகேஸ்வரி
மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்நன்னாளில் பெண்களைப் போற்றிய; பெண்களை மதித்த; பெண்களை சமமாக பாவித்த;பெண்களின் கனவுகளுக்கு கை கொடுத்த
ஒரே ஆண்மகன்
முண்டாசுக் கவி
மகாகவி பாரதிக்கு
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
பாரதியின் பாட்டாலே புதுமைப்பெண் என்ற புதுப்பொலிவுடன் நிமிர்ந்து நேர்கொண்டு பார்த்தவள் பெண்.
பெண்களைக் கல்வியறிவு பெறவிடாத மூடர்களைச் சாடியவன்
பெண்ணுக்கு ஞானம் ஈசன் அருளியது .... அதைத் தடுக்கும் அறிவிலிகளையும் அவர்தம் மடமைகளையும்...
தன் எழுத்தாலே சுட்டெரித்தவன்.
ஆணும் பெண்ணும் சமம் என்றால் தான் இந்த உலகம் சிறக்கும் என்ற பாரதி தான் பெண்களின் நம்பிக்கை நாயகன்...
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.... என்று பெண்ணுக்குக் குரல் கொடுத்த குல தெய்வம்....
பெண்மை வாழ்க! பெண்மை வெல்க!என்றுரைத்த புரட்சிக்கவி பாரதி போல் இனி யாரும் எங்கும் காண்பதரிது!!
பாட்டுடைத்தலைவன் பாரதியின் பொற்பாதம் வணங்கி இந்நன்னாளில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்....
மங்கையர் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!!
வென்று காட்டலாம் பாரதி கண்ட புரட்சிப் பெண்களே!!!
பாரதியின் எழுத்துக்கு உயிர் கொடுப்போம் பெண் சக்திகளே!
வாழ்க பெண்மை!வெல்க பெண்மை!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).