சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் நாம் பெற்ற பெண் பிள்ளைகள் போல் ஒரு சொந்தத்திற்கு வேறெதுவும் ஈடாகாது....
பெண் பிள்ளைகள் பிறப்பது நாம் செய்யும் புண்ணியத்தின் பலன் என்றே நான் கருதுகிறேன்.....
மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்....
கொலுசு சத்தம் கலகலக்க நம் வீடு முழுவதும் லட்சுமி கடாட்சம் பெண் பிள்ளைகளாலே என்று பேரின்பம் கொள்ளுங்கள்....
பெற்றெடுத்து... பேணி வளர்த்து.... படிக்க வைத்து... நகை நட்டு சேர்த்து... நல்ல வரன் பார்த்து, திருமணம் செய்து வைக்க மட்டுமா பெண் பிள்ளைகள்????....
யோசித்துப் பாருங்கள் பெண் பிள்ளைகள் உடனான உறவியல் அழகியலை....
பெண் பிள்ளைகளின் ஆத்மார்த்தமான அன்பில் உருகி மருகுங்கள்....
மகள்களைப் பெற்ற தாய் தந்தையர்கள் பெருமிதம் கொள்ளுங்கள்....
தங்க மகள்களுக்கு சர்வதேச மகள்கள் (மகாலட்சுமிகள்) தின நல்வாழ்த்துகள்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).