எனதருமை எழுதுகோலே...!
- அ. வென்சி ராஜ்
வெறுமையான காகிதம் விலைமதிப்பாகுது உன்னால்...
கச்சிதமாய் தோன்றும் கதைகள் காவியம் ஆகுது உன்னால்....
கவிஞனின் கற்பனைகள் அனைத்தும் கவிதையாகுது உன்னால்....
வானவில்லின் வண்ணங்களால் எழுத்துக்கள் வடிவமாகுது உன்னால்....
பல சிந்தனை வடிவங்களை எழுதி பத்திரப்படுத்த முடியுது உன்னால்....
இது மட்டுமா..?
வள்ளுவனின் கைகளில் தவழ்ந்து வள்ளுவம் பேசினாய்.....
தொல்காப்பியரின் தோள் மீது அமர்ந்து தமிழின் இலக்கணம் கூறினாய்.. ..
அவ்வையின் அறிவுக்கு அடிமையாய் இருந்து எழுதினாயோ. .?
நாங்கள் நினைப்பதை எழுதி வாசிக்க வைப்பதும் நீதானே....
ஏடுகள் பல எழுதி அறிவினை அகண்டமாக்க ஆதாரமானதும் நீதானே....
எத்தனை தட்டச்சுகள் வந்தாலும் தனி மனித எண்ணத்தை தாளில் வடித்திடுவது நீதான். ..
விரல்களின் நடுவில் நின்று வீர நடை போடும் என் எழுதுகோலே....
புலவனின் கையில் எழுத்தாணியாய் நின்ற நீ....
கம்பனின் கைகளில் தவழ்ந்து...
பாரதியை பாட்டிசைக்க வைத்து...
எங்கள் தமிழ் புதல்வன் கலைஞரின் கைகளில் எழுதுகோலாயும் உருவெடுத்து...
பல கவிஞரையும் தமிழ் அறிஞரையும் தடம் பதிக்க வைக்கும் நீ. ..
மதிப்பு மிகு எழுதுகோல் தான்....!
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)