என் வீட்டு செல்ல நாய்க்குட்டி!
- ச.ப. அம்புஜா
என் நாய்க்குட்டியின் பெயர் பப்பி. அவள் மிகவும் சிறியதாக மற்றும் அழகாக இருப்பாள். நாங்கள் அவளை செல்லமாக பாப்பு என்று அழைப்போம்.
நான் வீட்டிற்கு சென்றதும் என்னிடம் அழகாக விளையாடுவாள். என்னையும் என் தந்தையையும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவள் எப்பொழுதும் கடிக்க மாட்டாள். அவள் வெளிர் வெள்ளையாக இருப்பாள்.
எங்களது மீன்களை அவள் பத்திரமாக பார்த்துக் கொள்வாள். அவளுக்கு தயிர் சாதம் மிகவும் பிடிக்கும். அவளது மழலை குரல் அனைவரையும் ஈர்க்கும்.
என் மேல் ஏறி விளையாடுவாள். நான் அவளது தலையை தடவி அவளை மகிழ்ச்சிப்படுத்துவேன். அவளது பிறந்த நாள் 24 செப்டம்பர் மாதம். அவள் பிறந்த நாளுக்கு நாங்கள் இனிப்புகளை வாங்கி அவளுக்கு தருவோம். நான் அவளுக்கு டைகர் பிஸ்கட் தினமும் தருவேன். அவள் என்னுடைய தங்கை போன்றவள்.
நான் எங்க வீட்டுச் செல்லக்குட்டியை நல்லா பாத்துக்கறேன்.. அதேபோல நீங்களும் உங்கள் வீட்டு செல்ல நாய்க்குட்டியை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்
(எஸ்.பி. அம்புஜா, 8ம் வகுப்பு, ஜான் டீவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி)