அன்பு மாணவர்களே!
Feb 02, 2026,12:20 PM IST
- குமரேஸ்வரி.சி
மாணவர்களே கேளுங்கள்,
ஒவ்வொருவரும் தனித்தன்மை தான்.
யாரோ சீக்கிரம் கற்றுக் கொள்வார்,
யாரோ மெதுவாக முன்னே போவார்.
வேகம் முக்கியமில்லை,
விடாமுயற்சியே முக்கியம்.
தினமும் சிறிது படித்தாலே,
வெற்றி உங்களை தேடும் நிச்சயம்.
பயப்பட வேண்டாம் தேர்வை நினைத்து,
அது உன் திறனை காட்டும் நேரம்.
வெற்றி நிச்சயம்!
அதனால் குழந்தைகளே
நினைவில் கொள்ளுங்கள்!
உழைப்பே உன் உயர்வு.
மெல்ல கற்றாலும் விடாமல்
கற்கும் பாதையில் நடந்தால்,
வெற்றி உன் வழியில் வரும்!
(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிப்பாளையம், திருப்பூர்)