பெற்றோரை விடப் பேறு பெற்றவள் - என் ஆச்சி!

Su.tha Arivalagan
Dec 24, 2025,05:00 PM IST

- சி.ஏஞ்செலின் கிரேசிடா


பெற்ற அம்மாவுக்கு நிகர் நீ

வளர்க்கும் தந்தைக்குச் சமானம் நீ

பாசத்தில் இவர்களையும் மிஞ்சிவிட்டாய் நீ


தியாகத்தின் அடையாளம் நீ

அன்பின் சிகரம் நீ

அழும்போது அடைக்கலம் நீ

கதறும்போது உறுதுணையும் நீ

கலங்கும் நேரங்களில் கண் துடைப்பவள் நீ

எனக்காக இடைவிடாமல் இறையிடம்

வேண்டுபவள் நீ




உங்களுக்காக எதையும் இழக்கத்

தயாராகயிருந்தோம்

உங்களைத் தான் இழக்க தயாராக இல்லை

உங்களை இழந்து தவிக்கிறோம் ஆச்சி

எங்களுக்கு ஒரு ஆறுதல்-

இறைவனுடன் சேர்ந்துவிட்டாய் என்பதே


உங்களை இழந்த பிறகுதான்

தெரிந்துகொண்டேன் -

பிரிவு என்பது உடலுக்குத்தான் மனதிற்கு

அல்ல என்று.


(Angelin Gracita C, St.Marys College (Autonomous), Thoothukudi)