சுகமாய்ப் பயணியுங்கள்!
Nov 23, 2026,10:08 AM IST
- "நாவரசி" ந.வனிதா
நீண்ட நெடிய
தொடர் வண்டிப்பெட்டி வாழ்க்கை......
நம்முடன் பயணிப்பவர்
யாரெனத் தெரியாமலேயே அமையும் பயணம் ...
நாம் விரும்பாமலேயே
சிலர் வருவார்
பலர் போவார்....
வாழ்க்கைப்
பயணத்தில்
எண்ணற்ற நிறுத்தங்கள்....
எடுத்துக் கொள்வதைப்
பொறுத்தே
இன்ப-துன்ப நிறுத்தங்கள்....
சில நிறுத்தங்களில்
நினைவை
நிறுத்தவும்.....
பல
நிறுத்தங்களில்
கடந்து போகவும்
மனதை
பழக்கப்படுத்தினால்
பயணம் இனிமை...
சுகானுபவம் பெற
சுகமாய்
பயணியுங்கள்.....
(கவிஞர் ந.வனிதா, M.Sc.,(Maths) B.Ed.,M A.,(Economics). கவிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர், இசைச் சுவைஞர் என பன்முகம் கொண்டவர். சேலம் மாவட்டம்)