ஆயிரம் ஆயிரமாய்!

Su.tha Arivalagan
Nov 19, 2026,11:07 AM IST

- "நாவரசி" ந.வனிதா


ஆயிரம்  மலர்கள் தேடி

உனக்காக மது கொண்டு வரவா..

.

ஆயிரம் கனிதேடி பருகச்

சாறெடுத்து தரவா...


ஆயிரம் சொல் தேடி அதில் 

உன்னை ஒளித்து வைக்கவா....


ஆயிரம் நட்சத்திரப் போர்வையால் 

கதகதப்பாய் மூடி விடவா.....





ஆயிரம் சுவை கொண்டு 

உனக்கு அமுது படைக்க வா....


ஆயிரம் ராகங்கள் கொண்டு 

உன்னை தாலாட்ட வா...


ஆயிரம் சிப்பிகள் தேடி

முத்துக்கள் கொண்டு வரவா.....


ஆயிரம் இமைகள் கொட்டி

உன் கவிதைகள் வாசிக்க வா.....


ஆயிரம் முறை காற்றைத் போல

வந்து வந்து தழுவி போகவா....


ஆயிரம் கவிதைகளுக்குள் 

ஒருமுறையாவது

நான் வந்து போகவா....


எந்தன் 

ஆயிரம் கவிதைகளிலும்

ஒரு முறை நீ வந்து போக.. வா!


(கவிஞர் ந.வனிதா, M.Sc.,(Maths) B.Ed.,M A.,(Economics). கவிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர் என பன்முகம் கொண்டவர். சேலம் மாவட்டம்)