உன் விழியில் மலர்ந்த முதல் கவிதை!
Nov 20, 2026,10:18 AM IST
- "நாவரசி" ந.வனிதா
கொஞ்சம் கூட
கூசாமல்
பேசாமல்
கொலை செய்யும்
ஆயுதமடி.....
மூடி மூடித்
திறக்கும்
முத்து சிப்பியடி
உன் கண்கள்......
விழியில்
விரிச்ச
வலையில்
சிக்கிக் கொண்டவன்
நானடி .....
சிரித்த
கண்களுக்குள்
என் நெஞ்சம்
சிக்கிக் கொண்டதடி .....
ஊற்று எடுக்கும்
உணர்வுகளுக்கு
உயிர் நாடி
உனதிரு கண்களடி .....
வருடுகிற பார்வையில்
வாலிபப் பூ
பூக்குதடி ...
நானடி!
(கவிஞர் ந.வனிதா, M.Sc.,(Maths) B.Ed.,M A.,(Economics). கவிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர் என பன்முகம் கொண்டவர். சேலம் மாவட்டம்)