தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் அற்புத எதிரி!
Nov 24, 2026,11:17 AM IST
- "நாவரசி" ந.வனிதா
அடுக்கடுக்காய்
அடுக்கப்பட்ட
அணுகுண்டுகள்....
பிரித்த பக்கங்களின்
வாசம் பலரது
சுவாசம்......
விரல்களும் கண்களும்
வாசிக்கும்
ஆர்மோனியம் பெட்டி
இமை கொட்டாமல்
படிப்பதற்கு
இமயப்புகழ் பரிசு....
இதயம் உள்ளவர்
இதயத்திற்கு தரும்
அன்பு பரிசு....
காலாவதியான கவிஞனும்
வாழ்ந்து கொண்டுள்ளான்
பக்கத்திற்கு பக்கம்....
பலர் திறக்கப்படாத
திறக்க முடியாத
அற்புத சுரங்கம்....
தூங்கவிடாமல் தொந்தரவு
செய்யும் அற்புத எதிரி
எழுத்தாளன்.......
நூல்கள் தானே.....!
(கவிஞர் ந.வனிதா, M.Sc.,(Maths) B.Ed.,M A.,(Economics). கவிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், இசைச் சுவைஞர், தமிழ் இலக்கிய ஆர்வலர் என பன்முகம் கொண்டவர். சேலம் மாவட்டம்)