நானும் உன்னைப் போலவே....!
Nov 21, 2026,03:29 PM IST
- நாவரசி ந.வனிதா
நீ!
பனியில்
நனைந்தனையோ..
மழையில்
நனைந்தனையோ.,.
நீ!
நிரம்பி
வழிந்தனையோ.,..
நினைந்து
அழுதனையோ....
பூவே!
நீயும் பெண் பூவா?
நீ!
என்னை
ஒத்தனையோ.,
நான்
நின்னை ஒத்தவளோ.....
நான்!
அவனை
நினைந்ததிலே....
அவனென்
உயிரில் நனைந்ததிலே....
அவன்
என்னில்
இணைந்ததிலா.....
என்னிரு
கண்ணில் கலந்ததிலா.....
தேன் ஒழுகி
திளைத்தேனா....
தேகம் ஏங்கி
இளைத்தேனா...
மனதில்
மகிழ்ந்து இருப்பேனா....
மயங்கி
மலர்ந்தே இருப்பேனா.....
சொந்தம்
என்பதிலே தான்.,.
சொர்க்கம்
கண்டேனா நான்....
அவன்
அன்பில்
நனைந்தேனே!....
ஆசையில்
திளைத்தேனே!
(கவிஞர் ந.வனிதா, M.Sc.,(Maths) B.Ed.,M A.,(Economics). கவிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர் என பன்முகம் கொண்டவர். சேலம் மாவட்டம்)