களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
சென்னை: தேர்தல் களத்துக்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுறதுதான் ரொம்ப நகைச்சுவையா இருக்கு. விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்து போய்டணும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் நாதக ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எஸ்.ஐ.ஆர் என்பது வாக்கு திருத்தம் என்றார்கள் ஒரு கோடி வாக்கை நீக்குவது எப்படி திருத்தமாகும். குறுகிய காலத்திற்குள் விடுப்பட்டவர்கள் யார் யார் என்பதை எப்படி கண்டறிந்து மீண்டும் சேர்க்க முடியும். தற்போதைய காலத்தில் வாக்கை காப்பாற்றுவதே மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. அதிகாரத்தின் பொறுப்பற்ற செயலையே இதை காட்டுகிறது.
விஜய் களத்திற்கே இன்னும் வரவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் நிற்கவில்லை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலும் காணவில்லை. தேர்தல் களத்திற்கே வராதவர், களத்தைப் பற்றிப் பேசுவது மிகப்பெரிய நகைச்சுவை. களத்திற்கே வராதவர் களத்தில் இருப்பவர்களை பற்றி பேசுகிறார். அதனை சிரித்துவிட்டு கடந்து போய்விடவும். திமுக தீயசக்தி என்பது இப்போதுதான் விஜய்க்கு தெரிந்திருக்கிறது.
திமுக தீயசக்தி என்று விஜய் கூறினால், எதனால் அது தீயசக்தி என்பதையும் விளக்க வேண்டும். தம்பி விஜய்க்கு திமுக மட்டும் தான் எதிரி. ஆனால், எனக்கு திமுக, அதிமுக, பா.ஜ.க, காங்கிரஸ் என நான்கு எதிரிகள். பெரியாரை சீமான் திட்டி விட்டார் என கூறி ஓட்டு கேட்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா ? பெரியார் பெயரை கூறியவர்கள் 250 வாக்குகள் தான் ஈரோட்டில் வாங்கினார்கள். தவெக என்னுடைய தம்பி கட்சி.. அதனால், தட்டிதான் கொடுக்க வேண்டும். தவெகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை.. எங்களுக்குள் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.