நடைபாதை வாசிகள்!
Jun 25, 2026,03:43 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
யாசகம் வாங்கவா
கைகளைப் படைத்தான்?
கண்ணீரைச் சிந்தவாக்
கண்களைப் படைத்தான்?
சுடு மணலில் நடக்கவாச்
செருப்பில்லாக்
கால்களைப்
படைத்தான்?
பசிக்கும் போது உணவில்லா
வாழ்க்கையை ஏன் படைத்தான்?
செய்த பாவத்தின் சம்பளம்
வாழ்க்கையே அவலம்!
செய்தீவினைப் பலனோ இறைவா
நீ எமை வாட்டுவது?
எய்தவன் நீ இருக்க
யாரை நொந்து என்ன பயன்?
ஆயிரம்
கண்ணுடையாளுக்கும்
எங்கள் கஷ்டம்
கண்ணில் படவில்லையா?
அல்லது
உன் இஷ்டம்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)