நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

Meenakshi
Jan 29, 2026,05:25 PM IST

சென்னை: நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது. நெல்லை தொகுதி மக்கள் என்னை ஒரு பிள்ளையாக பார்க்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள். 2001 முதல் 2021 வரை நெல்லை தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். நெல்லை தொகுதி மக்கள் என்னை ஒரு பிள்ளையாக பார்க்கிறார்கள். நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது. 




ஓபிஎஸ் தனது கூட்டத்தை நடத்தி முடிக்கட்டும். அதன்பின்னர் தான் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியும். நல்வர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். இது வரைக்கும் ஓபிஎஸ்சிடம் கூட்டணி குறித்து பேசவில்லை. தேவைப்பாட்டல் கட்டாயம் பேசுவேன். தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கஞ்சா பழக்கம் தான். இந்த கஞ்சா பழக்கத்திற்கு அதிகளவில் வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.16 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு நாங்கள் 5 பைசா கூட செலவிடவில்லை. மத்திய அரசு திட்ட மேம்பாட்டுகளுக்காக 14 லட்சம் கோடிகள் கொடுத்துள்ளார். ஆனால் தமிழக முதல்வரோ அவர் எதுவுமே தரவில்லை என்று சொல்லிக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.