நாரணஹரியை நாளும் பணிந்து .. நற்பாதம் உய்வோமே!
- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
நந்தகோபஹரி
இளஞ்சிங்கஹரி
ஆழிமழைக்குஹரி
பரமனடிஹரி
கார்மேனிஹரி
செங்கண்ஹரி
கதிர்மதியஹரி
நாரணஹரியை நாளும் பணிந்து
நற்பாதம் உய்வோமே
கலியுக கறபகமாய்
ஆண்டாள் கற்கண்டாய்
பாமாலை பாடித்தந்தாள்
மார்கழித்திங்களில் மனம்மகிழ்ந்து
பாடியாடி துள்ளி
பால்கடல் துயின்றவனுடன் துயில்வோமே
நோற்றுச் சுவர்க்கமடைய
சூடிகொடுத்த பாவையைப்பற்றி
நாற்றத்துழாய்முடி நாரணனை
நாம் போற்றிப்புகழ்ந்து
கறவைகள் பின்சென்றானை
ஏலாப்பொய்களுரைப்பானை
ஏகாந்தமாய் பாடியேற்றுவோமே
வானும்விண்ணும் தொழுதேத்தும் புருஷோத்தமனை
புந்தியில் புகுந்து குள்ளக்குளிர குடைந்து
நீராடி வையம் வாழும் மாந்தரின் பாதம் பணிந்தால்
பங்கயக் கண்ணனின் திருவடி திண்ணமே
பூவிதழிலே புல்லாங்குழல் கானம்
பூலோகமே மயங்கிடவே புளகாங்கிதம்
புகலொன்றிலா நின்னடியில் புகுந்து
குளிர்கிறோம் குணவாளனே!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)