நட்பே வா!

Su.tha Arivalagan
Jan 22, 2026,03:11 PM IST

- பா.பானுமதி


காலாற நடக்கலாமா 

கவிதைகள் படிக்கலாமா 

பைக்கில் பயணம் செய்யலாமா 

பல கதைகள் பேசலாமா 

ஊரெல்லாம் சுற்றலாமா? 

உட்கார்ந்து விளையாடலாமா 

செய்திகளை விவாதிப்போமா 

சென்னை மழை பற்றி பேசலாமா 

கோவிலுக்கு செல்லலாமா 

குழந்தைகளாக மாறலாமா 

மேகத்தை ரசிக்கலாமா 




சோகத்தை சுட்டு தள்ளலாமா 

நட்சத்திரங்களை எண்ணலாமா

நடைப்பயிற்சி போகலாமா 

நூலகத்திற்கு செல்லலாமா 

நேர்மையாக வாழலாமா 

பூங்காவிற்கு போகலாமா 

பூக்களை பார்க்கலாமா 


கடற்கரைக்குப் போவோமா 

அலைகளில் கால் நனைப்போமா 

பழைய நண்பரிடம் பேசலாமா

மலரும் நினைவுகளில் முழுகலாமா 

மொட்டை மாடியில் அமரலாமா 

செய்த சேட்டைகளை எண்ணிப் பார்ப்போமா 

சுற்றியுள்ள செடிகளின் பெயர்களை அறிவோமா 

சுகமான மணங்களை பட்டியலிடுவோமா 

இலக்கணங்களை எண்ணிப் பார்ப்போமா 

இலக்கியங்களை சுவைத்து மகிழ்வோமா 

இதுபோல் இன்னும் எத்தனையோ இருக்க

ஏன் நண்பா நீ 

கைபேசியில் காலத்தை தொலைக்கிறாய் 

கடமைகளை தள்ளி வைக்கிறாய் 

யோசி உன் வாழ்நாளை நன்றாக வாசி 

சுற்றி இருப்பவரை நேசி...!

--