இயற்கை வழிபாடும் பொங்கலும்!

Su.tha Arivalagan
Jan 14, 2026,12:48 PM IST

- தி. மீரா


சூரியன் தந்த ஒளிக்கே நன்றி,

மழை தந்த மேகத்திற்கே நன்றி,

மண் தந்த தானியத்திற்கே நன்றி

நன்றி சொல்லும் நாளே பொங்கல்.


ஆறு, மரம், காற்று, மலை,

அனைத்தும் தெய்வம் தமிழர் நிலை,

உழவர் வியர்வை விதையாகி,

உலகம் நிறையும் உணவாய் மாறி.




பொங்கும் பானையில் பொங்கும் நன்றி,

இயற்கை தாய்க்கு செய்யும் வணங்கி,

வழிபாடாய் மாறும் வாழ்வு இதுவே

பொங்கல் காட்டும் பண்பாடு அதுவே. 


விதை விதைத்த நம்பிக்கைக்கு,

விளைச்சல் தந்த வானத்திற்கு,

உழைத்த கைகளின் கனவுக்கு,

உயிர் தந்த இயற்கைக்கு வணக்கம்.


கோலமிடும் வாசல் சொல்லும்,

பூமி தாய் மீது மரியாதை,

பொங்கும் பொங்கல் சுவையல்ல

பண்பாட்டின் பரிமாணம் அது.


சூரியன் தந்த ஒளி வணக்கம்,

மழை தந்த மேகம் வணக்கம்,

மண் தந்த தானியம் வணக்கம்

நன்றி சொல்லும் நாள் பொங்கல்.


மாட்டுக்கு மரியாதை,

மண்ணுக்கு மகிமை,

இயற்கை வழிபாடே

பொங்கலின் பெருமை.


நேற்று, இன்று, நாளை என,

இயற்கை இல்லா வாழ்வில்லை,

வழிபாடாய் வாழும் தமிழர்,

பொங்கலில் உணரும் உண்மை.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)