நன்றியுடன்!

Su.tha Arivalagan
Nov 02, 2026,03:44 PM IST

- கவிதை மழை அ.நவஜோதி அருண்


ஐம்பூதங்களில்

ஐக்கியமாகிய

உலகு... ! 

ஆண்டவன்

படைப்பில்... ! 


எழுந்தவுடன்

இருகரம்கூப்பி வணங்கிடுதல்

நலம். 

நன்றியுடன்..! 


பூவுலகில்

புகுந்து

நீக்கமற

விளையாடும்

பஞ்சபூதம்

உடலில்.... ! 




அனலாய், 

காற்றாய், 

நீராய், 

ஆகாயாமாய், 

மண்ணாய், 


அண்டிக் கிடக்கிறதே... 

அனைத்திலும்

ஐம்பூதம்.... ! 


உடலது

நிலையாக..... 

உயிர்வாழ்க்கை

உறுதியாக..... 

ஐம்பூதம்

அவசியமே... 


மிகினும்

குறையினும்

நோய்செய்யும்

உணவு மட்டுமன்று

அதில்

ஐம்பபூதமும் ஒன்று...!  


இருகரம் கூப்ப

இருதயம்

நெருங்க

வணங்கிடும்

சுவாசம்... உடலின் சமநிலைபேசும்... 


பணிவினை

கொடுத்து

சுழுமுனை

திறக்கும்.... 


இதயம்

கனிந்த

இனிதான

நன்றி...! 


நமை ஈன்ற இறைவனுக்கும்.

நலமாக உடலுக்கும், 

நமைசுமக்கும்

உலகினுக்கும்....! 


இருகரம்

சேர்க்கையில், 

எல்லா நாளும்

இனிய நாளே.. 

அஞ்சலி முத்திரையில்

நன்றியுணர்வு

நம் கையில்... 


(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர்.  சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)