என்னைவிட்டுப் போனவன் கண்டிப்பாக திரும்பி வருவான்!
Oct 17, 2026,05:21 PM IST
- கவிதை மழை அ நவஜோதி அருண்
திரௌபதியானதோ?
திடமலை.
உருவியுருவி
விழுந்தும்...
அருவி ஆடை
தொடர்ந்து
தருகிறானே?
கண்ணன்.
நீர்வீழ்ச்சி
--
தலையைக்
கலைத்து,
கலைத்துவிட்டது காற்று.
தளரவில்லை
மரம்.
புதிய சிகையலங்காரம்
செய்ததாக
பெருமைப்பட்டது.
தன்னம்பிக்கை
என்னைவிட்டுப்
போனவன்
கண்டிப்பாக
திரும்பிவருவான்.
கணவனா
என்றேன்...?
என் எஜமான்
என்றது.
கால் செருப்பு
நம்பிக்கை
--
நிறைய
மண்சட்டி
சுமக்கிறாள்
அம்மா.
சோத்துச்
சட்டி நிறைய.
குடிகாரன் வீடு
(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)