நிலவு தூங்கும் நேரம்!
- கவிஞர் க.முருகேஸ்வரி
நிலவு தூங்கிப் போனது...
ஆம்
நிலவும் தூங்கிப் போனது....
என் நினைவு மட்டும்...
உன்னையே நினைத்து ஏங்கிக் கொண்டே இருக்கிறது!!
உன்னை எவ்வாறு அனுபவித்து
வர்ணிப்பது
உன்னை எவ்வாறு ஆக்ரமித்து ஆட்கொள்வது
எங்கே தொடங்கி...
எவ்வாறு முடிப்பது...
உன்னை எவ்வாறு புகழ்ந்து பாடுவது
உன்னை எவ்வாறு வடிவாய் வடிப்பது
வடித்த பின் எவ்வாறு அணு அணுவாய் ரசித்து படிப்பது..
ஆம்...கவிதையே....
சீக்கிரம் வந்துவிடு...
உன்னை வடித்து படித்து விட்டு
நிலவோடும்
உன் நினைவோடும்
நான் உறங்கச் செல்ல வேண்டும்...
இப்படிக்கு
கண் விழித்து கவிதை புனைவோர் சங்கம்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).