ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை - நிர்மல் குமார் பேட்டி
சென்னை: திமுக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருத்துக்கணிப்பு எல்லாம் ஒன்றுமே இல்லை. புதிதாக வரும் சக்தியை யாராலும் கணிக்க முடியாது. 70 ஆண்டுகளில் இல்லாத ஒரு மாற்றம் நடக்கும். தவெக தலைவர் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார். கூட்டணி தொடர்பான அறிவிப்பை தலைவர் தான் அறிவிப்பார்.
தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒரு ஏமாற்று வேலை. எப்போது அமல்படுத்த போகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த தேதி என்று இல்லை. தேர்தலில் வாக்குறுதி கொடுத்த மாதிரி இப்போதும் கொடுத்துள்ளார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுதானே தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள்? இதுதான் பழைய ஓய்வூதியமா?. வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுபவர்கள் தான் திமுகவினர். அரசு ஊழியர்களை மாய வலையில் சிக்க வைத்துள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் பல வாரங்களுக்கு முன்பே பரிந்துரைத்த நிலையில் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. கடந்த 10ம் தேதியே தணிக்கைக்குழு படத்தை பார்த்துவிட்டது. தடைகள் பல வரலாம். அனைத்தையும் தகர்த்து வெற்றி வாகை சூடுவோம் என்று தெரிவித்துள்ளார்.