ஆடை ஈரப்பதத்தின் காய்ச்சல் நீ.. சூரியன்!

Su.tha Arivalagan
Apr 07, 2026,03:52 PM IST

- சீ.நிஷா


அடை மழையின் 

தேடல் நீ.!


ஆடை ஈரப்பதத்தின் 

காய்ச்சல் நீ.!




இலை செடி, கொடி, மரத்தின் 

உணவு நீ.!


ஈராயிரம் உயிர்களின் 

தேடல் நீ.!


உன்ன உணவு கொடுப்பவன் 

நீ.!


ஊர் மக்களுக்கெல்லாம்

தெய்வம் நீ.!


என் நிழலின் 

உருவம் நீ.!


ஏன் இப்படி என்று 

யோசிக்க வைப்பவன் நீ.!


ஐயோ! என கோடையின் 

உச்சம் நீ.!


ஒரே ஒருவன் 

நீ.!


ஓங்காரமாய் 

சிரிப்பவன் நீ.!


ஔடதமாய் 

என் மேனிக்கு நீ.!


ஆக மொத்தம்

பேரண்டத்திற்கும் உயிர் நீ.!


(சீ.நிஷா, டி.இ.எல்.சி.தொடக்கப்பள்ளி, ஆனைப்பாக்கம் , அரக்கோணம் ஒன்றியம்)