இனி இப்படி ஒரு பிறவி வேண்டாம்.. பிறவியே வேண்டாம்!

Su.tha Arivalagan
Nov 03, 2025,03:36 PM IST

- கஸ்தூரி நடராஜன் 


அன்பே  என் தோழி

உன் கண்ணுக்கு இரவு பகல்

ஒன்றுதான்.. 

ஆனால்

இதயத்திற்கு ஏது இரவு பகல்......?

கண்ணீரில் தொடரும் 

எண்ண ஓட்டத்தை

யார் அறிவர்.......? 

நான் அறிவேன்.....!

கேள்.

அது

என்றென்றும் மின்னும் பொன்னல்லவா.....?

சாதிக்கத் துடிப்பாய்

போதிக்கத் துடிப்பாய்,

எத்தனை எத்தனை

கலைகளில் இனைய

துடிப்பாய்.....!




உன்

விரல்நுனிகள் நடனமிடும்

புல்லாங்குழல் மேல்....!

அந்த

கண்ணனையே

மிஞ்சிடுவாய்

கான இசையில்...!

தேனாய் வந்து பாயும்

என் செவியில்...!

உணர்ச்சியிலே வரைவாய் ஓவியம்......!

தொட்டு தொட்டு பார்த்து

முத்தான எழுதுத்துக்களை

முத்து முத்தாய் எழுதுவாய்.

முதுகிலே வரையும் ஓவியம்

விரல்நுனியிலே பாயும்

மின்சாரமாய்....!

அப்படியே பொறித்திடுவாய்

ஏட்டினிலே.....!

தேடும் பொருள் எல்லாம்

மெய்யிலே உணர்ந்து

செவியிலேநுழைந்து

இதையத்தோடு

இணைத்திடுவாய்

கண்களைக் கட்டிய

இறைவன் உன்

எண்ணத்தை

கட்ட முடியாதே......!

பேருந்தில்

இறங்கினாய்

வா என்று கை கொடுத்தால்

தடி ஒன்று போதும் என்றாய்......!

வானத்தை வில்லாக்கி

வனத்திலே பதித்திடுவாய்.....!

கடுகைத் துளைத்து ஏழு கடலை புகுத்திடுவாய்.....!

என்று தான் ..... உன்

கண்களை சிறை

பிடித்தானோ...! இறைவன்....! 

போதும் 

இனிமேல் இப்படி ஒரு பிறவி வேண்டாம்......!

பிறவியேவேண்டாம்....!


(கஸ்தூரி நடராஜன் எம் எ. பி. எட் ஒரு ஆசிரியர். பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர்)