வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று. அதிரடியாக சவரனுக்கு ரூ.440 குறைந்தது தங்கம்!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,220க்கும் ஒரு சவரன் ரூ.57,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை நிலையற்ற விலையிலேயே இருந்து வருகிறது. ஒரு நாள் ஏற்றத்துடனும், ஒரு நாள் சரிவுடனும் இருந்து வருகிறது.இதனால், ஐப்பசியில் திருமணங்கள் வைத்துள்ள நடுத்தர வர்கத்தினர் பதைபைதப்புடனே இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை குறைந்துள்ளது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை குறைவால் தற்போது விஷேசங்கள் வைத்துள்ளவர்கள் நகைக்கடைகளை நோக்கி கிளம்புகின்றனர்.
சென்னையில் இன்றைய (11.11.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கும், ஒரு சவரன் ரூ.57,760க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,200 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,22,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,876 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,008 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,760 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,87,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,876க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,891க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,876க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,876க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,876க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,876க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,881க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ. 6,824
மலேசியா - ரூ.7,043
ஓமன் - ரூ. 7,112
சவுதி ஆரேபியா - ரூ. 6,830
சிங்கப்பூர் - ரூ. 7,045
அமெரிக்கா - ரூ. 6,927
துபாய் - ரூ.7,051
கனடா - ரூ.6,895
ஆஸ்திரேலியா - ரூ.6,773
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.102 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,020 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,200 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்