புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

Su.tha Arivalagan
Aug 18, 2025,06:44 PM IST

விழுப்புரம்: புலி வேட்டையாடும் போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது என்று விஜய் மற்றும் விஜய்யின் கட்சி தொண்டர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில்,  தவெக இல்லாத கட்சி. அவங்ககிட்ட என்னடா உங்க கொள்கைனு கேட்டா, தளபதி... தளபதினு சொல்றாங்க. எனக்கு தலைவிதி... தலைவிதினு கேக்குது. சரி எதுக்குடா வந்தீங்கனு கேட்டா, டிவிகே, டிவிகேனு கத்துறாங்க, அது எனக்கு டீ விற்க, டீ விற்கனு கேக்குது.  அப்போ டீ விற்க தான் இவ்வளவு பேரு கிளம்பி வந்து இருக்கீங்கள...சரி ஓரமா போய் வித்துக்கோங்க...




புலி வேட்டையாடும்போது அணில் குஞ்சு குறுக்கமறுக்க ஓடுது. அணிலே அணிலே ஓரமா போய் விளையாடு அணிலே... குறுக்கு மறுக்குமாக ஓடாதே அணிலே. போப்பா ஓரமா போய்  மரத்தில ஏறி உச்சிக்கு போ.


ஒரு மான, ஒரு காட்டெருமை, காட்டாடை அடித்து சாப்பிட்டால் புலிக்கு பெருமை. அதை விடுத்து ஒரு அணிலை அடித்து சாப்பிட்டால் புலிக்கு என்ன பெருமை. தம்பி மறுபடியும், மறுபடியும் சொல்றேன். சிவன் ஆட்டத்தை நீ சினிமாவில பார்த்திருப்ப.. இந்த சீமான் ஆட்டத்தை இனி மேல் தான் பார்ப்ப என்று தெரிவித்துள்ளார்.