அக்டோபர் வந்தாச்சு.. இந்த மாதத்தில் என்னெல்லாம் ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?

Swarnalakshmi
Oct 01, 2026,12:13 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026 புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று அக்டோபர் மாதம் பிறந்துள்ளது. தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் அக்டோபர் மாத நல்வாழ்த்துகள். அனைவருக்கும் இந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு, அக்டோபர் மாதத்தில் உள்ள சிறப்பான மற்றும் விசேஷமான நாட்களின் சிறு தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.


அக்டோபர் - பெயர்க்காரணம்:


க்ரிகோரியன் காலண்டர் பயன்படுத்துவதற்கு  முன்பாக ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டர் என்று அழைக்கப்பட்ட ரோமானிய காலண்டர் பயன்படுத்தும் முறையே வழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காலண்டரில் ஜூலை &ஆகஸ்ட் மாதங்கள் இல்லை. எனவே,ஜூலியன் காலண்டரின் படி ஒரு ஆண்டிற்கு பத்து மாதங்கள் மட்டுமே இருந்தது. இதன்படி அக்டோபர் மாதம் எட்டாவது மாதமாக கருதப்பட்டது. 


கிரேக்க மொழியில் 'அக்டோ' என்பது 'எட்டு' என்ற எண்ணை குறிக்கும். இதன்படி எட்டாவது மாதமாக அக்டோபர் மாதம் கருதப்பட்டது. எட்டாவது மாதத்தை குறிக்கும் வகையில் "அக்டோபர் "என இந்த மாதத்திற்கு பெயரிடப்பட்டது. பின்னர் க்ரிகோரியன் காலண்டரில் ஜூலை & ஆகஸ்ட் மாதங்கள் சேர்க்கப்பட்ட பிறகு அக்டோபர் மாதம் ஆண்டில் பத்தாவது மாதம் ஆனது. ஆனாலும் அக்டோபர் எனும் பெயரே இன்றும் நீடித்து வருகிறது.


2026 அக்டோபர் மாதத்தில் என்னென்ன விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்கள் என்பதை பற்றி பார்ப்போம்.


அக்டோபர் மாதத்தில் இந்து மதத்தின் மிக முக்கிய ஆன்மீக வழிபாடுகளும், பண்டிகைகளும் பெறுகிறது.அன்னை துர்கா,லட்சுமி,சரஸ்வதி ஆகியோரை 9 நாட்கள் வழிபடும் நவராத்திரி திருவிழா வருகிறது.




அக்டோபர் 1 -  உலக சைவ தினம்,(World vegetarian day), சர்வதேச முதியோர் தினம்(International Day of Old Persons).

அக்டோபர் 2   - காந்தி ஜெயந்தி,சஷ்டி விரதம் (தேய்பிறை ).

அக்டோபர் 3- அஷ்டமி திதி.

அக்டோபர் 4   - நவமி திதி.

அக்டோபர் 5 -  உலக ஆசிரியர் தினம். 

அக்டோபர் 6 - ஏகாதசி விரதம்.

அக்டோபர்  8 - பிரதோஷம்.

அக்டோபர் 9 - மாத சிவராத்திரி . 

அக்டோபர் 10  - மஹாளய அமாவாசை. நேரம் :நேற்று இரவு 9:53 முதல் இன்று இரவு 9:34 மணி வரை.

அக்டோபர் 11 -  உலக தபால் நாள். நவராத்திரி தொடக்கம்  - கொலு பண்டிகை ஆரம்பம்.

அக்டோபர் 16 - சஷ்டி விரதம் (வளர்பிறை ).

அக்டோபர் 18   - அஷ்டமி திதி.

அக்டோபர் 19 - நவமி திதி.சரஸ்வதி பூஜை& ஆயுத பூஜை.

அக்டோபர் 20  - விஜயதசமி.

அக்டோபர் 22 - ஏகாதசி விரதம்.

அக்டோபர்   -  23 பிரதோஷம்.

அக்டோபர் 25 -  பௌர்ணமி.

அக்டோபர்  27- கிருத்திகை விரதம்.

அக்டோபர் 29  - சங்கடஹர சதுர்த்தி

அக்டோபர் 31   -  சஷ்டி விரதம்.


புரட்டாசி மாதமும் ஐப்பசி மாதமும் இணைந்து வரும் இந்த அக்டோபர் மாதம் அனைவரும் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று வாழ்வோமாக.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.