என்னவனே!
Jan 29, 2026,04:25 PM IST
- கபிசப்ரி தென்றல், தென்காசி
இறைவன் கொடுத்த வரம் என்னவன்..
அன்னை போன்று
அரவணைக்கிறாயே..
தந்தை போன்று
தாங்குகிறாயே....
சகோதரனைப் போன்று
பாதுகாக்கிறாயே....
சகோதரி போன்று
சகித்துக் கொள்கிறாயே......
என்னவனே
என்னவென்று
சொல்வதோ.......
ஓர் குழந்தையைப் போன்று
பாவிக்கிறாயே......
என்னவனே நீ இல்லா
பொழுது ஏது ......
இறைவா கோடான கோடி
நன்றி
என்னவனை வரமாக தந்த
உனக்கு...........
யாசகம் இல்லாமல்
பெற்ற
வரமே என்னவன்
அனைத்தும் சிலையே
என்னவன் முன்.....
என்னவனே என்னவென்று சொல்வது
நின் அன்பை.....
மனம் ஒடிந்த
போவாயே
விழிகளின் .
ஓரத் துளியைக் கண்டு
என்னவனே என்னவென்று
சொல்வது
நின் இதயத் துடிப்பை....
எனக்காக
படைக்கப்பட்ட
வரமே என்னவன்