ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!

Su.tha Arivalagan
Dec 09, 2025,10:15 AM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


ஓம்கார ஹரியே 

ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே 

கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ 

கோகுலம் காக்க கோபியர் பின் ஓடிய ஹரியே 

ஆண்டாள் அனுபவித்த வடபத்ரசாய் ஹரியே 

அடியோங்கள் துயர் நீக்கும் நீலமேகஷ்யாமல ஹரியே 

மங்களம் மங்களம்




இராமாயணம்

பாராயணமே

இகபரசுகமே

அடைந்திடலாமே

இராமநாமமே 

தாரகநாமமே

கல்லான அகலிகை

பெண்ணான நாமமே 

இராம பாததுகளே 

பவித்ரமே பார்தழைக்க 

பாரோர் பரமதமடைய 

பரிந்துரைத்த இராமநாமமே


ஆலிளிளஞ்தளிரில்

ஆழ்ந்த நித்திரயோ! 

ஆழிமழையிலழகனே! 

ஆண்டாளின் அமுதனே

ஆழியேந்தி மிளிரும் மின்னலே! 

ஆலங்கட்டி கருணைபொழியும் 

ஆராவமுதனே! 

ஆலவட்டம் விரும்பும் வரதனே!

ஆலிங்கனமோ அனுமனுடன் 

ஆனந்தவல்லி நாயகனே!

ஆசிர்வதியும் அடியோங்களையே!

 

உறையூர் உறைந்த உத்தமனே 

உறிவெண்ணெயடி உவந்தே உலாவினாய் 

உலகபுகழ் பாலகனே 

உன்பாதம் பணிந்து 

உய்ந்துப்போனேனடியன்


அகழ்ந்தேன்  ஹரிநாமத்திலே.. 

ஆழ்ந்தேன்  அன்பிலழகனே! 

இழந்தேன் என் மனமதை.. 

ஈகையானேன் பக்தியிலே!

உழன்றேன் உன்மத்தமாய்! 

ஊணே ஆனேனின் எளிமையில்..  

எழ்மையும் நீங்கிடவே

ஏற்றமடைந்திட  

ஐயமற நெகிழ்ந்து  

ஒன்றிடுவேனுன் திருவடியிலே!

ஓம்காரமே ஓதி நின் 

ஔஷதம் பெற்றிடுவேன் 

கஃபேயானேன் அடியேன்!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)