Online Classes: மாறி வரும் உலகம்.. ஆன்லைன் கிளாஸ்.. குழந்தைகளின் புதிய கல்வி அனுபவம்!

Su.tha Arivalagan
Mar 31, 2026,02:54 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


கொரோனா காலத்துக்குப் பிறகு கல்வி முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதில் முக்கியமான ஒன்று ஆன்லைன் கிளாஸ். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே மொபைல், லேப்டாப் அல்லது டேப்லெட் மூலம் குழந்தைகள் பாடங்களை கற்கும் முறைதான் ஆன்லைன் கிளாஸ்.


இந்த முறையில் ஆசிரியர்கள் இணையதளத்தின் மூலம் நேரடியாக பாடங்களை கற்பிக்கிறார்கள். மாணவர்கள் வீடியோ கால் மூலம் கிளாஸில் கலந்து கொண்டு பாடம் கேட்கிறார்கள், சந்தேகங்கள் கேட்டுத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதனால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் கல்வி தொடர முடிகிறது.




ஆன்லைன் கிளாஸின் மூலம் பல நன்மைகளும் இருக்கின்றன. வீட்டிலிருந்தபடியே படிக்க முடிவதால் நேரம் சேமிக்கப்படுகிறது. டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்வதால் குழந்தைகள் தொழில்நுட்பத்தையும் அறிந்து கொள்கிறார்கள். சில சமயம் பதிவு செய்யப்பட்ட பாடங்களை மீண்டும் பார்த்து புரிந்து கொள்ளவும் முடிகிறது.


ஆனால் சில சவால்களும் உள்ளன. அதிக நேரம் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களுடன் நேரடியாக பழகும் வாய்ப்பு குறைகிறது. மேலும் இணைய இணைப்பு சரியாக இல்லையென்றால் பாடங்களை சரியாக கேட்க முடியாத நிலையும் வருகிறது.


எப்படியாயினும், காலத்தின் மாற்றத்தோடு கல்வியும் புதிய வடிவம் எடுத்துள்ளது. தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் ஆன்லைன் கிளாஸ் குழந்தைகளின் கல்வி பயணத்தில் ஒரு நல்ல துணையாக இருக்கும்.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)