ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த ராணுவ நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த இந்த ராணுவ தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர் அருகே உள்ள லிட்வாஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
லிட்வாஸ் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 3 பேர் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் வெளிநாட்டு தீவிரவாதிகள் என்று தெரிகிறது. ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
ஹர்வான் பகுதியின் முல்நார் பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் தொடங்கியுள்ளது. அந்தப் பகுதியில் தற்போது கூடுதல் படையினர் அனுப்பப்ட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தீவிரமான தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.