ஆஸ்கர் 2026 விருது பெற்றவர்களின் முழு பட்டியல்
லாஸ்ஏஞ்சல்ஸ் : ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான 98-வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார்) வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது. பிரபல நகைச்சுவை கலைஞர் கோனன் ஓ பிரையன் (Conan O’Brien) இந்த விழாவைத் தொகுத்து வழங்கினார்.இந்த ஆண்டின் ஆஸ்கார் விருதுகளில் 'One Battle After Another' திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் உட்பட 6 விருதுகளைக் குவித்து ஆதிக்கம் செலுத்தியது. ரயான் கூக்ளரின் 'Sinners' திரைப்படம் 4 விருதுகளையும், 'Frankenstein' 3 தொழில்நுட்ப விருதுகளையும் வென்றன.
வெற்றியாளர்கள் பட்டியல்:
சிறந்த திரைப்படம் - One Battle After Another
சிறந்த நடிகர் - மைக்கேல் பி. ஜோர்டான் (Sinners)
சிறந்த நடிகை- ஜெஸ்ஸி பக்லி (Hamnet)
சிறந்த இயக்குநர் - பால் தாமஸ் ஆண்டர்சன் (One Battle After Another)
சிறந்த துணை நடிகர் - சீன் பென் (One Battle After Another)
சிறந்த துணை நடிகை - எமி மடிகன் (Weapons)
சிறந்த சர்வதேச திரைப்படம் - Sentimental Value (நார்வே)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - KPop Demon Hunters
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - ரயான் கூக்ளர் (Sinners)
சிறந்த தழுவல் திரைக்கதை - பால் தாமஸ் ஆண்டர்சன் (One Battle After Another)
சிறந்த ஆவணப்படம் - Mr. Nobody Against Putin
தொழில்நுட்ப விருதுகள்:
சிறந்த இசை (Original Score): லுட்விக் கோர்ட்சன் (Sinners)
சிறந்த பாடல்: "Golden" (KPop Demon Hunters)
சிறந்த ஒளிப்பதிவு: ஆட்டம் டூரால்ட் அர்காபா (Sinners) - இந்த விருதை வெல்லும் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
சிறந்த படத்தொகுப்பு: ஆன்டி ஜூர்கென்சன் (One Battle After Another)
சிறந்த ஆடை வடிவமைப்பு: பிராங்கண்ஸ்டைன் (Frankenstein)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: பிராங்கண்ஸ்டைன் (Frankenstein)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: பிராங்கண்ஸ்டைன் (Frankenstein)
சிறந்த ஒலிப்பதிவு: F1
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் (Avatar: Fire and Ash)
மைக்கேல் பி. ஜோர்டான்: 'Sinners' படத்திற்காக முதல்முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். இந்த விருதை வெல்லும் ஆறாவது கறுப்பின நடிகர் இவராவார்.ஜெஸ்ஸி பக்லி: 'Hamnet' படத்தில் நடித்ததற்காக தனது முதல் ஆஸ்கார் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.ஒளிப்பதிவில் சாதனை: ஆட்டம் டூரால்ட் அர்காபா, சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளில் புதிய கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்களைச் சந்தித்த திரைப்படங்கள் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.