தமிழ் எத்தனை தமிழ்.. அத்தனையும் தேன் துளி..!
Feb 21, 2026,02:47 PM IST
- ஜெனிட்டா ரீனா
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது வேறு எங்கும் கண்டோம் ; செந்தமிழ் நாடெனும் போதினிலே; இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே; "தமிழுக்கு அமுதென்று பேர் '"அந்த தமிழ் எங்கள் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்''
தமிழ் மொழியின் வகை( சிறப்பு பெயர்கள்) சேர் தமிழ், சீர் தமிழ் , நற்றமிழ் , முத்தமிழ், மா தமிழ் இன்பத்தமிழ், இடைத்தமிழ், இயற்றமிழ், எங்கள் தமிழ் , விந்தை தமிழ் கன்னித்தமிழ், தென் தமிழ் , பாவலர் தமிழ், பண்ணுயர் தமிழ், தேனிகர் தமிழ், திருவாண செந்தமிழ், அணி தந்த தமிழ், களிப்பதும் செந்தமிழ், பாங்கூர் செந்தமிழ், அழகு தந்த தமிழ், வியத்தகு செந்தமிழ், மன்னன் தமிழ், ஆசை தமிழ் , அருமைத் தமிழ், வண்ணத் தமிழ், தூய தமிழ், கொஞ்சும் தமிழ், விந்தைத் தமிழ்.
ஒரு கருத்தை பிழையின்றி எழுதவும் ,பேசவும் பயன்படுவது மொழி .மொழி உரையாடலுக்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது. தாய் மொழியாம் தமிழிலே தான் நம் சிந்தனைகள் விரிவடைகிறது ;கற்பனை திறன் வளர்கிறது. நாம் எந்த ஒரு மொழியை கற்றாலும் அதை நம் தாய் மொழியின் மூலம் மட்டுமே உணர முடியும் .சிந்திக்க முடியும். அப்படி ஒரு மாபெரும் சக்தி தாய் தமிழுக்கு மட்டுமே உண்டு .
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் "கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ். அத்தகைய தமிழை நாம் வாசிப்போம்; சுவாசிப்போம்; பெருமை சேர்ப்போம்; அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்!!!
வாழ்க தமிழ் !வளர்க தமிழ் !வாழிய தமிழ் !வெல்க தமிழ்!
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)