தோழர் நல்லக்கண்ணு!
- எம்.கே. திருப்பதி
செங்கொடியை
ஏந்திய கம்பம்
எளிமை தான் இந்த
ஏந்தலின் பிம்பம்
கருப்புத் தோளுக்குள்
கலர் கனவுகள் கண்டவர்
வெள்ளை ஆடையை போல்
சொல்லையும் கொள்பவர்
விடுதலைப் போராட்டம் என்றாலும்
வீதிவழி போராட்டம் என்றாலும்
நீதிவழி நின்றவர்
காம்ரேடுகளின் காந்தி
கட்சித் தலைவர்களின்
கனகச்சித இலக்கணம்
மாற்று இயக்கங்களும்
போற்றும் புனிதன்
வீணாகும் உடலை
தானமாக்கிய மனிதன்
எனக்கு
எதிர்முகாம் என்றாலும்
கண்ணிய முகம் கண்டால்
கதிரொளியாய் களை கட்டும்!
அண்ணாரின் மறைவிற்கு
அழுது புலம்பும்
அறிஞர்களின் ஆற்றாமையே
அண்ணலின் தொண்டுக்கு சான்று!
வெறுமனே அவர்
வாழ்ந்து மறையவில்லை
செங்கொடி சீலரே
சென்று திரும்புங்கள்...
கருப்பு காந்திக்கு இந்த
காவியின் செவ்வணக்கம்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)